Select the correct answer:

1. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக. நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.

2. 'கல்வி அழகே அழகு' என்றும்;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.

3. 'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்'
-பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்

4. 'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.

5. பொம்மல் என்பதன் பொருள்

6. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்

7. 'ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே'
-என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்

8. பாடல் அறிந்து பொருத்துக.
(a) காலை மாலை உலாவி நிதம் 1. ஒளவையார்
(b) மீதூண் விரும்பேல் 2. திருமூலர்
(c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் 3. திருவள்ளுவர்
(d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி
(a) (b) (c) (d)

9. ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்

10. ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்